சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று திறக்கப்படுகிறது..!
கொரொனாவால் மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோவில் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்படுகிறது. மலையாள மாதத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரிமலை நடை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் என்பதால் பாதுகாப்பு விதிமுறைகளோடு தினசரி 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கான முன்பதிவுகள் விர்சுவல் கியூ மேனேஜ் சிஸ்டம் மூலம் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு கொரொனா நெகட்டிவ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மணிமலையாறு, பம்பை, மீனச்சல் ஆறுகள் குளங்களில் பக்தர்கள் இறங்கவும், குளிக்க அனுமதியில்லை.
5 பேருக்கு மேல் வைத்து ஊர்வலம் செல்வது வாகனங்களில் செல்வது போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் எருமேலி, வடசெரிகரா ஆகிய இரண்டு வனப் பாதைகள் வழி மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







