--- --:--:-- --

கோவையில் முதன்முறையாக 5 ஊராட்சிகளில் 5 ரூபாய்க்கு 10 லிட்டர் ஆர்.ஓ.வாட்டர்.பொதுமக்கள் வரவேற்பு !!!

3.1

கோவை மாவட்டத்தில் பவானி,சிறுவாணி உள்ளிட்ட பல்வேறு சுவையான குடிநீராதாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இருந்தாலும் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ஆர்.ஓ.வாட்டர் வழங்க முடியாத நிலை இருந்து வந்தது.

 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் முதன்முறையாக அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையப்பம்பாளையம்,காரேகவுண்டன் பாளையம்,மசக்கவுண்டன் செட்டிப்பாளையம், குன்னத்தூர், பச்சாபாளையம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ. வாட்டர் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நிறைவு பெற்று மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆர்.ஓ.வாட்டர் டேங்கில் 1 ரூபாய்க்கு 2 லிட்டரும்,5 ரூபாய்க்கு 10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயத்தை உள்ளே செலுத்தினால் தானியங்கி முறையில் ஆர்.ஓ.வாட்டர் வழங்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon