--- --:--:-- --

கௌதாரிகளை வேட்டையாடிய 5 பேர் கைது..!

10

திண்டுக்கல் அருகே பறவைகளை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாடிக்கொம்பு அருகே வேட்டை கும்பல் ஒன்று செல்வதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

 

இதில் வேட்டையாடக் கூடாத கௌதாரிகளை அவர்கள் வைத்திருந்ததை அறிந்த அதிகாரிகள் 30 படகுகளை பறிமுதல் செய்தனர். இதனிடையே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

 

இதையடுத்து வனத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon