தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ காற்று காரணமாக மழை பெய்யும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இரணியல் உள்ளிட்ட இடங்களில் ஐந்து சென்டி மீட்டரும் சித்தாறு குளச்சலில் தல 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






