--- --:--:-- --

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு 520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

1.1

தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு 520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 2023 – 2024 ஆம் ஆண்டு வரை 520 கோடி ரூபாய் சிறப்பு தொகுப்பு ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

 

இது வறுமை விகிதத்துடன் இணைக்கப்படாமல் தேவையைப் பொறுத்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அமைச்சரவையின் முடிவு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

புதிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிக்கல்வி முறையை வலுப்படுத்த ஸ்டாக் திட்டத்தின் கீழ் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon