--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 4462 பேருக்கு பாதிப்பு..52 பேர் உயிரிழப்பு

7.1

மிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 4462 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், 52 பேர் உயரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் மூன்று மாதங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் பாதிப்பு கடந்த 3 நாட்களாக 5 ஆயிரத்திற்கும் கீழ் என படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்து 4462 ஆக பதிவாகியுள்ளது, இதனால் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 5083 ஆகும். இன்னும் 42 ஆயிரத்து 566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

அதிக பாதிப்பு

இன்று உயிரிழப்பும் 52 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 423 ஆக உள்ளது. சென்னையில் இன்றும் ஆயிரத்தை தாண்டி 1130 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 389, சேலம் 274, செங்கல்பட்டு 272, திருவள்ளுர் 207, திருப்பூர் 168 என இந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பும், பிற மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையிலும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon