--- --:--:-- --

தமது சொத்தை போலி பத்திரம் தயாரித்து மிரட்டுவதாக நால்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சண்முகவேல் என்பவர் புகார் மனு !!!

14

கோவை கணபதி பகுதியில் வசித்து வரும் சண்முகவேல் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை மீட்பது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளார்.

 

மனுவில் கோவில் பாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட விளாங்குறிச்சி கரட்டுமேடு பகுதியில் தமக்கு பாத்தியப்பட்ட 40 சென்ட் மனை மற்றும் அருகாமையில் உள்ள சொத்துக்களையும் போலி ஆவணங்கள் தயாரித்து ராமலிங்கம் மற்றும் சாந்தலிங்கம் ஆகிய இருவர் ராணி, செல்லமுத்து என்பவர்களுடன் கூட்டு சேர்ந்து போலி கிரையப்பத்திரம் மற்றும் பிற ஆவணங்களை சட்டத்திற்கு புறம்பாக தயார் செய்துள்ளதாகவும், அதை வைத்துக்கொண்டு இடையூறு செய்த நிலையில் ஏற்கனவே அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு கொடுக்கப்பட்டு ராமலிங்கம் சாந்தலிங்கம் ஜெயிலுக்கு சென்றனர்.

 

இந்நிலையில் அவர்கள் ஜெயிலில் இருந்து வந்த பிறகு மீண்டும் ராணி,செல்லமுத்து ஆகியோர் மூலம் ஒரு போலியான கிரையம் ஏற்படுத்தி இன்றளவும் தொல்லை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் நால்வரும் என்னை என்னை ஏமாற்றி சட்டவிரோதமான பணம் சம்பாதிக்கும் கூட்டுச்சதி உள்ளது.

அதற்கு நான் உடன்படாத காரணத்தால் இந்த ராணி,செல்லமுத்து, ராமலிங்கம், சாந்தலிங்கம் பல வகைகளில் தனக்கு தொல்லை கொடுத்து வருகின்றார்கள்.இந்த சூழ்நிலையில் இவர்கள் நான்கு பேரும் தனக்கு தொந்தரவு கொடுப்பது மட்டும் நில்லாமல் தனது இடத்தின் வாடகைதாரரான சௌந்தர் அவர்களுக்கும் இடையூறு செய்வதால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், மேற்படி ராணி, செல்லமுத்து மற்றும் அவர்களின் அடியாட்கள் கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்று தன் இடத்திற்குள் அத்து மீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் மிரட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தான் அப்போதே கோவில்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு புகார் தெரிவித்ததாகவும் கூறினார்.

 

மேலும், மேற்படி ராணி, செல்லமுத்து,ராமலிங்கம், சாந்தலிங்கம் ஆகியோர் மிகுந்த பணம்,அரசியல் , காவல்துறை செல்வாக்கு கொண்டவர்கள் இந்த சூழ்நிலையில் கடந்த 08-10-2020 அன்று அவர்கள் மீண்டும் தன்னை அச்சுறுத்தும் விதமாக மிரட்டி சென்றதுடன் தன் மீது அவர்களின் காவல்துறை செல்வாக்கை பயன்படுத்தி பொய் கிரிமினல் கேஸ் போட்டு ஓரிரு தினங்களில் உள்ளே அனுப்பிவிடுவதாக சவால் விட்டு சென்றதாகவும் கூறினார்.

 

ஆகவே, இந்த விஷயத்தில் தீவிரமாக விசாரணை செய்து அவர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon