காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்த இளம்பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மாரண்ட அல்லியை சேர்ந்த விக்னேஷ் திருச்சியை சேர்ந்த காஞ்சனாவை பெற்றோர் எதிர்ப்பை மீறி ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக காஞ்சனா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில் அவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







