--- --:--:-- --

மதுரையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுப்பு..!

11

மதுரை அருகே படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊழியரின் உடல்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் ஊராட்சி மன்ற ஊழியர் முனியசாமி ஆகிய இருவரும் கடந்த 11ஆம் தேதி இரவில் மலையடிவாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

 

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நீடித்த நிலையில் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

 

ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெறமாட்டோம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.

 

கொல்லப்பட்ட ஊராட்சி மன்ற ஊழியர் முனியசாமி குடும்பத்திற்கு முதல் கட்ட அரசு சார்பில் 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இதன் இடையே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊராட்சி செயலர் வீரன் என்ற பால்பாண்டி முன்னாள் தலைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon