--- --:--:-- --

லே பகுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற குழு ஆய்வு..!

9

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற குழு லடாக்கில் பதற்றம் நிறைந்த லே பகுதியில் இந்த மாத இறுதியில் ஆய்வு செய்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக லடாக்கில் உள்ள பகுதியில் பெரும் பதற்றம் கொண்ட பகுதியாக தொடர்ந்து இருந்து வருகிறது.

 

சமீபத்தில் வெளியான அறிக்கையில் லே போன்ற கடுமையான இடங்களில் பணிபுரியக்கூடிய வீரர்களுக்கு தரமான பாதுகாப்பு உடைகள், உணவு மற்றும் பனிச்சறுக்கு வாகனங்கள் ஆகியவை சரியாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 

இந்த நிலையில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி மக்களவை தலைவர் ஆத்திரஞ்ச் சௌத்ரி தலைமையில் எதிர்க் கட்சி எம்‌பி‌க்களைக் கொண்ட குழு லடாக் பகுதியில் ஆய்வு நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அனுமதி கோரியிருந்தார்.

 

அனுமதி கிடைத்துள்ள நிலையில் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற குழு லே பகுதியில் நேரில் ஆய்வு நடத்துகிறது. ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுடன் மட்டுமல்லாமல் ராணுவ வீரர்களிடமும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய உணவு பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்துவார்கள் என சொல்லப்படுகிறது.

 

இது தொடர்பான அறிக்கையை அவர்கள் மத்திய அரசுக்கு சமர்பிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon