நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய நடிகை பார்வதி! காரணம் என்ன?
மலையாள நடிகர் சங்க செயலாளரின் சர்ச்சைக்குரிய கருத்தால் மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து பிரபல நடிகை பார்வதி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
மலையாள நடிகர் சங்கம் சார்பில் தயாரிக்கப்படும் இரண்டாவது படத்தில் நடிகை பாவனாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும், இறந்தவர் எப்படி திரும்ப வர முடியும் எனவும் சர்ச்சைக்குரிய வகையில் மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மலையாள நடிகை பார்வதி சங்கத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து தனது நண்பர்கள் வெளியேறியபோது நடிகர் சங்கத்தை சீர்படுத்த சிலராவது வேண்டும் என்பதால் சங்கத்தில் தொடர்ந்து வந்ததாக பாரதி தெரிவித்துள்ளார்.
ஆனால் இடைவேளை பாபு கூறியதை கேட்டு இணையத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை போய் விட்டதாக கூறிய அவர் நடிகர் சங்கம் கைவிட்டஒரு பெண் உறுப்பினரை இறந்து போனதாக கூறியது வெட்கக் கேடானது என பார்வதி கூறுகிறார்.
இடைவேளை பாபுவும் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகை பார்வதி வலியுறுத்தியுள்ளார்.






