--- --:--:-- --

டீ தூள் விலை உயர்வால் டீ விலை உயர வாய்ப்பு..!

13

தேயிலை தூளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடைகளில் தேனீரின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது . ஊரடங்கு காரணமாக உற்பத்தி குறைந்ததால் தேயிலை நிறுவனங்கள் கணிசமாக விலையை உயர்த்தியுள்ளனர்.

 

சென்னையில் கிலோ 480 ரூபாய்க்கு விற்பனையான 3 ரோசஸ் தேயிலை 530 ரூபாய்க்கும், அதே 480 ரூபாய்க்கு விற்பனையான சக்ரா கோல்டு தேயிலை தூள் 516 ரூபாய்க்கும், 410 ரூபாய்க்கு விற்பனையான ஏ‌வி‌டி கோல்ட் 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

அதேபோல டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களான பால், கடலை மாவு, எண்ணெய் போன்றவையும் விலை உயர்வு கண்டுள்ளதால் கடைகளில் தேநீரின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேனீர் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். வீட்டு பயன்பாட்டுக்காக வாங்கப்படும் 50 கிராம் 100 கிராம் கால் கிலோ தேயிலை பேக்கிங்களிலும் விலை உயர்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon