முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் காலமானார்..! முதல்வர் கண்ணீர் அஞ்சலி..!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் காலமாகி உள்ளார். எனவே தாயார் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிரமத்தில் இருந்து வந்துள்ளார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திங்களன்று இரவு திடீரென காலமாகியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் கார் மூலம் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சிலுவம்பாளையம் பகுதிக்கு வந்தார்.
5.30 மணி அளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையம் வந்து அவரது தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அப்போது தங்கமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் திரளாக அஞ்சலி செலுத்தினர்.







