--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 5242 பேருக்கு கொரோனா உறுதி.. உயிரிழந்தோர் 67 பேர்..! 5222 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ்!!

16

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரு மாதங்களாகவே குறைந்தபாடில்லை. தினசரி 5 ஆயிரத்தை தாண்டியே பாதிப்பு பதிவாகி வருகிறது. அதே போல் உயிரிழப்பும் கடந்த சில நாட்களாக 60 முதல் 70 வரை என தினசரி பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று 5242 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 5222 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்னத கடந்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்று 68 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,187 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் பாதிப்பு 1272 ஆக பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் மட்டும் 23 பேர் பலியாகியுள்ளனர்.

 

இதனால் சென்னையில் மொத்த பலி எண்ணிக்கை 3396 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், 17வது நாளாக இன்றும் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, செங்கல்பட்டு, சேலத்தில் மாவட்டங்களில் இன்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon