--- --:--:-- --

தேங்கிய மழைநீர்க் குழியில் விழுந்த பெண்..!

5

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் பெண் ஒருவர் தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெற்கு மாசி வீதி சந்திப்பில் ஜடா முனி கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் நிரம்பி இருந்தது.

 

அந்த இடத்தில் பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் துரிதமாக மீட்டனர். ஒப்பந்தகாரர்கள் முறையான தடுப்பு அமைத்து பகுதியில் பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon