பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை எனக்கூறிய அமைச்சர் செங்கோட்டையன்..!
தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆந்திராவில் பள்ளிகள் திறந்த சில நாட்களில் மாணவர்கள் 29 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் மாணவர்களின் உயிர் முக்கியம் என்ற அடிப்படையிலும் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியமில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை எனக்கூறிய அமைச்சர் செங்கோட்டையன்..!





