--- --:--:-- --

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் பணியிட மாற்றம்…!

6

டலூரில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் 3 காவலர்களை இடமாற்றம் செய்ததாக கூறி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடலூர் புதுநகர் காவல்துறையினருக்கு பெரியார் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் மூன்று காவலர்களும் கடலூரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரியவர் சிலை முன்பு நின்று புகைப்படம் எடுப்பது சட்டவிரோதமானதா என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விணவியுள்ளார்.

 

3 காவலர்களின் இட மாறுதலை திரும்பப் பெற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் தவறான அணுகுமுறையை தமிழக அரசு தடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இட மாற்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon