தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 22ஆம் தேதி அவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து கடந்த 2ஆம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் மீண்டும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உடல் நலத்துடன் இருக்கும் விஜயகாந்த் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக கேட்டுக்கொண்டுள்ளது.







