போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களையும் குறை கூற கூடாது : அக்ஷய் குமார்
போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கருதக்கூடாது என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள காட்சி பதிவில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் பல குறைகளும் வெளியாகியுள்ளது என்றும் வலி ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி படவுலகில் போதை பொருள் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை என்றும் அதேநேரம் எல்லா நடிகர்களும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கருதக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒட்டு மொத்த சினிமா துறையையும் போதை பொருளுடன் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






