தமிழகத்தில் இன்று 5622 பேருக்கு கொரோனா பாதிப்பு… உயிரிழந்தோர் 65 பேர்.. சென்னையில் மேலும் அதிகரிப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கூடவோ குறையவோ இல்லாமல் சொல்லி வைத்தாற்போல் கடந்த பல நாட்களாகவே ஒரே மாதிரியாக பதிவாகி வருகிறது .
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5595 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 56 22 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 5603 பேர் வீடு திரும்பிய நிலையில் இன்று 5592 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று உயிரிழப்பு 65 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 67 பேர் ஆவர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக 1364 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள் லிது. அடுத்தபடியாக கோவையில் 486,, செங்கல்பட்டு 395, சேலம் 351, திருவள்ளுர் 291, தஞ்சையில் 244 என மாவட்டங்களில் இன்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






