--- --:--:-- --

உ.பி.யை போல திருப்பூரிலும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

9

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் உத்திரப்பிரதேசத்தில் மட்டுமல்ல தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தொடர்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வட மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக 3 பேரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் கோவையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். திருப்பூர் அருள்புரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தரும்படி அந்த பெண் கூறியுள்ளார்.

 

இதையடுத்து அந்த பெண்ணை திருப்பூருக்கு வரும்படி ராஜேஷ்குமார் அழைத்துள்ளார். இதை நம்பி வந்த அந்தப் பெண்ணை உகாயனூர் அருகே பாறை குழி என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் ராஜேஷ்குமார். அங்கு ஏற்கனவே காத்திருந்த 5 நண்பர்களுடன் ராஜேஷ்குமாரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இதை தொடர்ந்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்லடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜேஷ்குமார் அவரது நண்பர்கள் அன்பு, கவின் ஆகியோரை கைது செய்தனர், தலைமறைவாகியுள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon