--- --:--:-- --

“முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்!!” செயற்குழு கலாட்டாவுக்கு பின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதல் “வாய்ஸ்”!!

jfi

திமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதில் எந்தக் குழப்பமுமே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எட்டப்படாமல் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே முட்டல் மோதலாகி அக்டோபர் 7-ந் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என முந்திக் கொண்டு முதல் குரல் கொடுத்திருப்பது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

 

தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பிரச்னை பெரிதாக வெடித்துள்ளது. அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பெரும்பாலானோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டாலும், இந்த முறை ஓபிஎஸ் விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை.

 

இதனால் 2 நாட்களுக்கு முன் நடந்த அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் காரசாரமாக மோதிக்கொண்டது அதிமுகவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற முடிவு எட்டப்படாமலே 5 மணி நேரமாக நடந்த செயற்குழு முடிவு பெற்றது.

 

பின்னர், முதல்வர் வேட்பாளர் யார்? என்பது பற்றி அக்டோபர் 7-ந் தேதி ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் இணைந்து அறிவிப்பார்கள் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். ஆனால் 7-ந் தேதியும் அறிவிப்பு வெளியாகுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

இதனால் முதல்வர் வேட்பாளர் யார்? என அமைச்சர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் பலரும் கடந்த 2 நாட்களாக பொது வெளியில் வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வரும் நிலையில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் முந்திக் கொண்டு திருவாய் மலர்ந்துள்ளார்.

 

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாய்ஸ் எதிரொலிக்குமா?

 

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம், 7-ம் தேதி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இணைந்து முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்று கூறியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசனைத் தொடர்ந்து இன்னும் எந்தெந்த அமைச்சர்கள் வாய்ஸ் கொடுத்து குளறுபடி ஏற்படுத்தப் போகிறார்களோ என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon