--- --:--:-- --

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் காலமானார்..! கொரோனா சிகிச்சையில் இருந்தவர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு!!

13

ந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் காலமானார். 94 வயதான அவர் கொரோனா தொற்று பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.

 

தமிழகத்தில் இந்து முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக இருந்தவர் ராம.கோபாலன். 94 வயதான ராம.கோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

 

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மூச்சுத் திணறல் காரணமாக ராம. கோபாலன் காலமானார்.

 

ராம.கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். எத்தனையோ சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும், கருணாநிதியும் ராம.கோபாலனும் கடைசி வரை நட்புடன் பழகியவர்கள் என மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon