மானாமதுரை அருகே வறட்சியால் ஊரையே காலிசெய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கிராமம்..!
விவசாயிகளின் கண்ணீரை துடைக்குமா மாவட்ட நிர்வாகம்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது. மன்னர்முடியேந்தல் கிராமம் இந்த கிராமம் சிவகங்கை விருதுநகர் மாவட்டம் எல்லையில் உள்ளது. இதனால் இரு மாவட்ட நிர்வாகம் இந்த கிரமத்ததை கண்டுகொள்ளாமல் உள்ளனர் .
மன்னர்முடியேந்தல் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு நஞ்சை, புஞ்சை என 200 ஏக்கர் க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயம் செய்ய போதிய தண்ணீர் இல்லாததால் விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. இதனால் மன்னர் முடியேந்தல் கிராமத்தினர் விவசாயம் செய்யமுடியாமல் வறுமமையில் வாடிவருகின்றனர்.

இந்த கிராமமத்தில் மானவாரி கண்மாயாக உள்ளது. காரணம் 20 வருடங்களுக்கு முன்னால் கண்மாய்க்கு வரும் வரத்துகால்வாய் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. அருகே உள்ள கிராமத்தின் கண்மாய் கரையை நீடித்து வரத்துகால்வாய் மூடப்பட்டுள்ளதாக குற்றம் சாற்றுகின்றனர். இது குறித்து பக்கத்தில் உள்ள கிராமத்தில் முறையிட்டனர். ஆனால் வரத்து கால்வாயை திறந்துவிட அரசகுளம் கிராமத்தினர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் இரு கிராமத்தினருக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவிவருகிறது.
அரசகுளம் கிராமம் சிவகங்கை மாவட்ட எல்லையிலும் மற்றொரு புறம் மன்னர் முடியேந்தல் கிராமம் விருதுநகர் மாவட்ட எல்லையிலும் உள்ளதால் இரண்டு மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க முன்வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது மன்னர் முடியேந்தல் கிராமத்தின் வரத்துகால்வாய் உள்ளதா என திருச்சுழி தாசில்தார் தனராஜ் மற்றும் வருவாய்துறைனர் ஆய்வுசெய்து நிலத்தை அலந்து பார்த்தனர். பின்னர் கிராமத்தின் வரத்துகால்வாய் உள்ளது எனவும் விரைவில் கண்மாயின் வரத்துகால்வாய் திறக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர்.
முறையாக வரத்து கால்வாயை திறக்க அனுமதி கிடைக்காவிட்டால் ஊரையே காலிசெய்யபோவதாக வருத்தத்துடன் தெரிவித்தனர்.







