உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகர் சூர்யா அளித்துள்ள பதில்…!
இந்திய நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் தன் மீதான புகார் தொடர்பான விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நேர்மையான தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மக்களின் அரசியல் சாசன உரிமைகளை நீதித்துறை மட்டுமே உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக நீட் விவகாரத்தில் நீதிமன்றம் தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.






