--- --:--:-- --

ஜெ‌இ‌இ பிரதான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

8.1

ஜெ‌இ‌இ பிரதான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். கொரொனா பாதிப்பால் இருமுறை ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்புக்கான ஜெ‌இ‌இ நுழைவுத் தேர்வு கடந்த ஒன்றாம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்தப்பட்டது.

 

கொரொனா முன்னெச்சரிக்கை விதிகளுடன் நடத்தப்பட்ட இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த நிலையில் பிரதானத் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 24 மாணவர்கள் 100% பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிகபட்சமாக தெலுங்கானாவில் 8 மாணவர்களும், டெல்லியில் 5 மாணவர்களும், ராஜஸ்தானில் மூன்று மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். ஜேஇ‌இ பிரதான தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அதிக சதவீதத்துடன் தேர்ச்சியடைந்த 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் ஜெஇ‌இயின் அடுத்த கட்ட தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.

 

இந்த தேர்வு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Reply

Right Menu Icon