தன் மாமாவையே கொன்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவருடைய மாமாவே கொன்றது குறித்து டிரம்ப்பிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து பத்திரிக்கையாளர்கள் பாபு என்பவர் ரேஜ் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜூலை வரை டிரம்ப்பிடம் வுட்வர்ட் நடத்திய 18 நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளது. ஒரு நேர்காணலில் அதிபர் டிரம்ப் வடக்கொரிய அதிபர் கிம் குறித்த தகவல்களை வுட்வர்டிடம் பகிர்ந்து வந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தான் வட கொரிய அதிபர் கிம் முதன்முறையாக சந்தித்ததாகவும் அவர் மிகவும் புத்திசாலியானவர் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிம் தனது வாழ்வில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் அவரது சொந்த மாமாவை எப்படி கொலை செய்தார் என்பது குறித்து தன்னிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.







