--- --:--:-- --

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழும் சிறைவாசிகள் விடுதலை செய்திட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!

1.1

ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைதிடலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் PFI மாவட்ட தலைவர் முகமது மன்சூர் SDPI மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்திட வேண்டும் என்றும் சிறைவாசிகள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்திட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன . ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் PFI நகர் செயற்குழு உறுப்பினர் முகமது பகிம் நன்றியுரை நிகழ்த்தினார்.

 

Leave a Reply

Right Menu Icon