--- --:--:-- --

மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரை யாருக்கும் தெரியாமல் கரும்பு தோட்டத்தில் புதைத்த 3 பேர்..!

10

ஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயின் உடலை யாருக்கும் தெரியாமல் கரும்பு காட்டில் புதைத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஐந்தாம் தேதி கரும்பு தோட்டத்திற்கு சென்ற ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் மாயமானார்.

 

இதுகுறித்த புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். வயலுக்கு சென்ற கணேசன், தியாகராஜன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாகவும் இதனைப் பார்த்த தியாகராஜன் நண்பர்கள் ராமச்சந்திரன், ராஜகோபால் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் கரும்பு காட்டில் உடலை புதைத்தது தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon