கொரொனா தடுப்பு மருந்து கூட்டணியில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்வதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தை..!
உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்ஸின் எனப்படும் கொரொனா தடுப்பு மருந்து கூட்டணியில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை கூறிய உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா ஆழ்ந்த அனுபவம் கொண்டது என கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் உருவாகும் கொரொனா தடுப்பு மருந்துகளை உரிய முறையில் நாடுகளுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக கோவாக்ஸ் என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கோவால்சின் என்ற பெயரில் தடுப்பு மருந்தை உருவாக்கி வரும் இந்தியாவையும் தான் உருவாக்கிய கூட்டமைப்பில் சேர்க்க உலக சுகாதார நிறுவனம் முயன்று வருகிறது.







