இணைய வழி வகுப்புகளுக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது..!
இணைய வழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்றுகின்றனவா என் பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இணையவழி வகுப்புக்காக மாணவர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது கட்டாயப்படுத்தக்கூடாது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பிற்கு 30 முதல் 45 நிமிடங்கள் கொண்ட இரண்டு வகுப்புகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 36 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்த நெறிமுறைகளை பின்பற்றுவதற்கான ஒப்புதலை அனைத்து பள்ளிகளிலும் இருந்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியும் வகுப்பு வாரியாக நேர அட்டவணையும், அதற்கான ஆசிரியர் விவரங்களையும் தொடர்ச்சியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழி வகுப்பு சார்ந்த புகார்களை டிஎன்பிடிஏ என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இணைய வழி வகுப்பால் மன அழுத்தம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆலோசகரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.







