வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்..!
வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வரும் நிலையில் அந்த முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதில் 67 ஆயிரத்து 212 பேருக்கு வேலை வாய்ப்பு உருவானது. வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த போதும் கடந்த 5 மாதங்களில் நாட்டிலேயே அதிகமான அளவிற்கு முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இந்த நிலையில் மேலும் அதிகமான முதலீடுகளை ஈர்ப்பதற்காக சலுகைகளுடன் உருவாக்கப்பட்ட புதிய தொழில் கொள்கை இன்று வெளியிடப்படுகிறது.







