--- --:--:-- --

மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தவனை எரித்து கொலை செய்த கணவன்…!

20

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியுடன் பழகியவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமச்சந்திர புரத்தை சேர்ந்த மணியின் மனைவி அபிராமிக்கும், எதிர் வீட்டில் வசித்த ராஜேசுக்கும் சில மாதங்களாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக மணிக்கும், ராஜேசுக்கும் பிரச்சினை இருந்த நிலையில் நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் மீது மணி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் இன்று உயிரிழந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon