சென்னை அயனாவரத்தில் டிவி விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது..!
சென்னை அயனாவரத்தில் டிவி விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 20 நாட்களில் நிகழும் இரண்டாவது அதிர்ச்சி சம்பவம் இது. சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் மொய்தீன். இவரது இரண்டு வயது குழந்தை நஸ்ரியா பாத்திமா மாலை 5 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.
குழந்தை உறங்கி கொண்டு இருந்த இடத்தின் அருகே இரண்டடி உயரமுள்ள நாற்காலியில் தீ வைக்கப்பட்டு இருந்தது. அப்போது வீட்டில் சுற்றி வந்த பூனை ஒன்று பீரோவில் இருந்த டிவியின் மீது குதித்து உள்ளது. இதனால் டிவி தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்ததாக தெரிகிறது.
முகத்தில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த மாதம் தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து சென்னை சேலையூரில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
இதுபோல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க குழந்தைகளை கையாள்வதில் பெற்றோர் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.






