தமிழ் பேசும் இந்தியன், இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட் அணிந்த யுவன்..!
தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகம் அடங்கிய டீ-ஷர்ட் அணிந்திருக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகம் அடங்கிய டீ-ஷர்ட் இடம்பெற்றிருக்கிறது. இதில் திருவள்ளுவர் படமும் உள்ளது. இவருடன் நடிகர் சிரிஷ் இருக்கிறார்.
அவர் இந்தி தெரியாது போடா என்று ஆங்கில வசனம் அடங்கிய டீ-ஷர்ட் அணிந்துள்ளார். இந்திக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வரும் நிலையில் இந்த டீ ஷர்ட் சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.






