சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 5 பேர் பலி..!
சேலத்தில் நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர ஐந்து ரோடு அருகே உள்ள நரசோதிப்பட்டியில் அன்பழகன் என்பவரின் வீட்டில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
அன்பழகனின் சகோதரர் கார்த்தி குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்தார். மர அறுவை மில் உரிமையாளர்கள் வீட்டில் நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரு வாகனங்களுடன் உடனடியாக சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டிற்குள் சிக்கி இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி மகன்கள் சர்வெஷ், முகேஷ் மற்றும் அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகிய 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அன்பழகன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது .ஆனால் போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பது சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






