5 பைசாவுக்கு ஒரு பிளேட் பிரியாணி..! குவிந்த மக்கள்..!
ராமநாதபுரத்தில் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசா வுக்கு ஒரு பிளேட் பிரியாணி செய்யப்பட்டதால் ஏராளமான வாங்கி சென்றனர். அந்த பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கடையில் 5 பைசா கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி கொடுப்பதாக விளம்பரம் செய்தனர்.
இதனையடுத்து காலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் 5 பைசா நாணயத்தை கொடுத்து பிரியாணியை வாங்கி சென்றனர். பழைய நாணயங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்ற விற்பனையை அறிவித்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.






