இன்று பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கூட கொரொனா இல்லை என்பது உறுதியானதால் அந்த அணி இன்று பயிற்சி ஆட்டத்தை தொடங்க உள்ளது. சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நேற்று நான்காவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் தோனி உட்பட ஒருவருக்கு கூட கொரொனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






