--- --:--:-- --

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் சீராக முன்னேற்றம்..!

12.1

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னணி பாடகர் எஸ் பி பி யின் உடல் நிலை கடந்த மாதம் பின்னடைவை சந்தித்தது.

 

அவர் நலம் பெற வேண்டி திரைத்துறையினரும், ரசிகர்களும், பொதுமக்களும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை சற்று சீரானது. இந்நிலையில் எஸ் பி பி யின் உடல் நிலை சீராக முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தற்போது அவர் சுய நினைவுடன் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ ரீதியாக அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எஸ்பிபி மகன் சரணும் அவரது உடல்நிலை நான்காவது நாளாக சீராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon