ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாடம் புரியாததால் 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!
ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாடம் புரியாததால் மனமுடைந்த பதினோராம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கரட்டுபட்டியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் மகன் விக்ரபாண்டி. திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
கொரொனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் அவருக்கு வகுப்பு எடுத்துள்ளனர். ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் சொல்லித்தரும் பாடம் தனக்கு புரியவில்லை என கூறிய மாணவன் விக்கிரவாண்டியை தந்தை இளங்கோவன் திட்டியதாக தெரிகிறது.
அதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே காரணத்துக்காக ஆண்டிபட்டியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் தாக்கம் குறைவதற்கு அதே போன்று மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







