--- --:--:-- --

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் கல்லறை லண்டனில் சேதப்படுத்தப்பட்டுள்ளது..!

6

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் கல்லறை லண்டனில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு இங்கிலாந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமது சொத்துக்களை விற்று பிரமாண்ட முல்லை பெரியாறு அணை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுயிக்.

 

தமிழக மக்களால் போற்றப்படும் பென்னிகுயிக் 1911 ஆம் ஆண்டு லண்டனில் காலமானார். அவருக்கு லண்டனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்தில் கல்லறை எழுப்பப்பட்டது. லண்டன் வாழ் தமிழர்கள் அவரது கல்லறைக்கு சென்று வணங்கி வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தனர்.

 

இந்நிலையில் பென்னிகுயிக் கல்லறையின் பீடத்திலிருந்து 3 டன் எடை கொண்ட கல் சிலுவை பெயர்த்து எடுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இருக்கும் லண்டன் காவல்துறையினர் தேவாலயத்தின் சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon