--- --:--:-- --

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது..!

2.1

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி மாநிலம் முழுவதும் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான தளர்வுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அரசு அறிவித்த ஞாயிறு முழு முடக்கம் இன்றுடன் நிறைவடைகிறது. மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவை என்று மக்கள் வெளியில் நடமாட கூடாது என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தால் வழக்கு பதியப் படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon