--- --:--:-- --

ஆர்.எஸ்.மங்கலத்தில் சாலையோரம் கழிவுநீர் சாக்கடை…! ஒரு பக்கம் தடுப்புச் சுவர் இல்லாததால் காத்திருக்கும் ஆபத்து!!

b630da46-47cd-4d16-b1b9-9abf64ad9cd6

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் முக்கிய சாலையை ஒட்டி ஓடும் கழிவு நீர் கால்வாய், பாதுகாப்பு சுவர் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கால்வாயில் விழும் ஆபத்து உள்ளது.

 

ஆர்.எஸ்.மங்கலம் நகரின் 12-வது வார்டில் தனியார் பள்ளியின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஒரு பக்கம் சுவர் கட்டி மறு பக்கம் சுவர் இல்லாமல் உள்ளது. இதன் அருகே பள்ளி ஒன்றும் உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அதை தாண்டிதான் வர வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

 

இந்தச் சூழலில் பள்ளி செல்வோர் அதில் விழுந்து அடிபடும் நிலை உள்ளது. மேலும் முக்கிய சாலையின் ஓரம் இந்த சாக்கடை கால்வாய் செல்வதால் வாகன ஓட்டிகளும் தவறி விழும் ஆபத்தும் உள்ளது.

 

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகி ரிஸ்வான் கூறுகையில், ஆர்.எஸ்.மங்கலத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலையில் அதிகப்படியான போக்குவரத்து உள்ளது.

 

கொரொனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தமிழக அரசின் கட்டுப்பாட்டல் கொரொனா குறைந்து பள்ளிகள் திறக்க உள்ள இந்த சூழலில் பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு இந்த சாக்கடை பகுதியில் ஒரு புறம் சுவர் எழுப்பி அந்த கழிவுநீர் வாடை வெளியில் வீசாமல் இருக்க காண்கிரீட் சிலாப்புகள் போட்டு மூடி தர வேண்டும் என ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon