--- --:--:-- --

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த வாரம் முதல் துவக்கம்..!

8.1

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐ‌சி‌எம்‌ஆர் அறிவுறுத்தல்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனைகளில் பரிசோதனை நடைபெறும் என்றார்.

 

அரசின் வழிமுறைகளை பின்பற்றாமல் கொரொனா நோய் தொற்றை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா நோய் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல் அறிகுறிகள் தென்பட்டால் தங்களை பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா இல்லாத நோய்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

மழைக்காலங்களில் பரவும் வைரஸ் மற்றும் டெங்கு போன்ற பரவல்களை தடுக்கவும் கொரொனா தடுப்பு மருத்துவக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon