--- --:--:-- --

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..!

7

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர் மற்றும் அவரது நண்பர்கள் என 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவந்தியாபுரத்தை சேர்ந்த கோகுல கண்ணன் என்பவர் தனது பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடுத்தெருவில் வைத்து வாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

 

இதனை வீடியோவாக பதிவு செய்த கோகுலக்கண்ணன் பின்னர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து கோகுல கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் என 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon