--- --:--:-- --

என்‌ஐ‌ஏ அதிகாரிகள் போல நடித்து இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் கொள்ளையடிப்பு..!

5.1

சென்னையில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பயங்கரவாதியான கடத்தல் கும்பல் தலைவன் தௌஃபிக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மண்ணடியில் சிறந்த தொழிலதிபர் திவான் அக்பர் என்பவர் தன்னை கும்பல் கடத்தி சென்று இரண்டு கோடி ரூபாய் அபகரித்ததாக முத்தையால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தும் காவல்துறை கடத்தல் கும்பலை சேர்ந்த ஆல்பர்ட் மற்றும் உமா மகேஸ்வரன் ஆகிய இருவரை கை து செய்தது. கடத்தல் கும்பலின் தலைவன் தௌஃபி பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர் என்பதால் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தியது.

 

சோட்டு என்ற புனைப்பெயர் கொண்ட தௌஃபிக் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தமிழகத்தின் முக்கிய குற்றவாளியாக ஒரு உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. திருச்சியிலிருந்து கர்ப்பிணி மனைவியான சல்மாவை கைது செய்த காவல்துறை அவருடன் தலைமறைவான கணவனை குறித்து விசாரணையை முடுக்கி விட்டது.

 

இந்த வழக்கில் தொடர்புடைய கோவையை சேர்ந்த அப்துல் காதர், சிக்கந்தர் ஆகிய இருவர் தப்பி செல்ல முயன்ற போது காவல்துறையிடம் சிக்கினார். காவல்துறை பிடியில் உள்ள ஆல்பர்ட் மற்றும் உமா மகேஸ்வரனை விசாரித்ததில் அவர்கள் கடத்தல் காட்சிகளை விவரித்துள்ளனர்.

 

என்‌ஐ‌ஏ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரான அக்பரிடம் இருந்து பணம் பெற்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை கூறியுள்ளது. பிராட்வே பகுதியில் காரில் சென்று தொழிலதிபர் அக்பரை டிக் டாக் உடையணிந்து மடக்கிய கடத்தல் கும்பல் தங்களை என்‌ஐ‌ஏ அதிகாரிகள் என அறிமுகம் செய்துள்ளது.

 

ஹவாலா பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியவர்கள் அக்பரை மற்றொரு காருக்கு மாற்றி ஈசிஆரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. தன்னை என்‌ஐ‌ஏ உயர் அதிகாரியாக காட்டிக்கொண்ட பயங்கரவாதி தௌஃபிக் வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா ஏன் 3 கோடி ரூபாய் தருமாறு அவரை மிரட்டியதாக தெரிகிறது.

 

அக்பரின் சகோதரர் தமீம் அன்சாரி மூலம் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹவாலா பணம் கைமாறியதால் அக்பர் விடுவிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. தன்னிடம் பணம் பெற்றது என்‌ஐ‌ஏ அதிகாரிகள் அல்ல கடைத்தல்காரர்கள் என சந்தேகம் வரவே அக்பர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். என்‌ஐ‌ஏ உயர் அதிகாரி போல நடித்த தௌஃபிக் மீது என்‌ஐ‌ஏ வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon