--- --:--:-- --

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடந்த திருமணம்..!

6

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகவே ஒரு திருமண விழா நடந்து முடிந்துள்ளது. கௌதம் குமார், மனோகிரி ஜோடிக்கு கோவில்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

 

மண்டபத்தின் வாயிலில் பன்னீர் தெளித்து வரவேற்கும் இடத்தில் விருந்தினர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. அனைவரும் தெர்மர் ஸ்கேனர் மூலம் வெப்ப நிலையை சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தனிமனித இடைவெளியை பின்பற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் விருந்தினர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

 

மணமக்கள் விருந்தினர்கள் அனைவருமே முக கவசம் அணிந்து இருந்தனர். முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி அவசியம் குறித்த பேனர்களும் இடம் பெற்றிருந்தன. திருமணம் முடிந்தபின் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட தாம்பூல பைகளில் கபசுரக் குடிநீர் தயாரிப்பதற்கான பொடியும் முகக்கவசம் பரிசாக வழங்கப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon