இத்தாலியில் திடீரென வெடித்து சிதறிய படகு..!
இத்தாலியில் எரிபொருள் நிரப்பப்பட்ட படகு ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பொன்சா என்ற இடத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக படகினை தயார் செய்து கொண்டிருந்தார். இறுதியாக படகிற்கு எரிபொருளை அவர் நிரப்பினார்.
அதன் பின்னர் புறப்பட ஆயத்தமான போது திடீரென படகின் பின்புறம் வெடித்து சிதறியது. இதில் அந்த பெண் தூக்கி வீசப்பட்டு கடலுக்குள் விழுந்தார். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்களும் கடலுக்குள் குதித்து அந்த பெண்ணை மீட்டனர்.
எரிபொருள் நிரப்பியதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என விசாரணை நடத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






