--- --:--:-- --

சிவகங்கையில் சித்தப்பாவின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற நபர்கள்..!

5

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பூர்வீக சொத்தை ஏமாற்றிய சித்தப்பாவின் தலையை வெட்டி சாக்கு பையில் எடுத்து சென்று அண்ணன் மகன்கள் இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டிணத்தை சேர்ந்த சையத் முகமதுவுக்கு விற்பனை மற்றும் யூசுப் ரகுமான் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

 

இந்த நிலையில் யூசிஃப் ரஹ்மான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயலில் கடந்த 20 வருடங்களாக கோழி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அண்ணன், தம்பி இடையே நீண்டகாலமாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

நேற்று மீண்டும் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதை அடுத்து இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon