--- --:--:-- --

ஒட்டன்சத்திரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

9

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சாஸ்தா நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவரது மகள் ரித்திகா.

 

அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி ரித்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக ரித்திகா செல்போன் வாங்கித் தருமாறு கேட்டு வந்ததாகவும் குடும்ப சூழல் காரணமாக பெற்றோர் வாங்கித் தராததால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon